மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரம் என்ன?

சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 16.55 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 18.88 சதவீதம் பதிவாகி இருந்தது.
வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்
வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்
Published on: 
Summary

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகம் 15.99%, தாராபுரம் 17.55%, தட்டாஞ்சாவடி 19.20% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்குச்சாவடியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

வாக்குப்பதிவு

இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 15.99 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 17.55 சதவீதமும் வாக்கானது பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் 19.20 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்

2026 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 16.55 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 18.88 சதவீதம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com