கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகளை அடையாளம் காட்டிய இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி

மதுரையில் கடந்த அக்டோபர் 14 அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகை கடை திறந்துவைக்கப்பட்டது.
Meenakshi
Published on: 
Summary

மதுரை தனிஷ்க் நகை கடையில் தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பத்தில் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வயல் வெளியில் புதைத்து வைக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டனர்.

மதுரையில் கடந்த அக்டோபர் 14 அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகை கடை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நகைக்கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்று கொண்டிருந்த வேளையில், இரண்டாம் தளம் காலியாக இருந்தது.

மேலும் அதன் மூன்றாம் தளத்தில் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர்களை பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் நடந்தபோது, மின்தூக்கி பொருத்துல், வண்ணம் பூசுதல், மின்சார மற்றும் குழாய் வேலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

இதன் காரணமாக கட்டிடத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரத்தின் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க ஒன்பது சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தர்.

மேலும் யூடியூபர் நிஷாந்த் என்பவரின் தந்தை சுரேஷை கைது செய்து, அவரிடம் இருந்த 5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில், நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகளை புதைத்து வைதத நகைகளை இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

இதையடுத்து ஒரு வயல்வெளிக்கு போலீசாரை அழைத்து சென்ற மீனாட்சி, அங்கு எருக்கலாஞ் செடியின் நடுவே புதைத்து வைக்கப்பட்ட நகைகளை அடையாளம் காட்டினார்.

அப்போது அந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்ட தங்க நகைகளை போலீசார் தோண்டி எடுத்து மீட்டனர்.

X