தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை:

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.பி.யாக பதவியேற்று பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே, மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்து சென்னை உயர்நீதிமன்றம், மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com