ஆகஸ்ட் 15-க்குள் ஆதார் e-KYC முடிக்காதவர்கள் சிலிண்டர் வாங்க முடியாது.. முடிக்கும் நடைமுறை இதுதான்

AadhaarFaceRD என்ற அதிகாரபூர்வ செயலியை பதிவிறக்கவும்.
சிலிண்டர்
சிலிண்டர்
Published on

இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஆதார் e-KYC சரிபார்ப்பை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குகள் முடிக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் ஆகிய கேஸ் நிறுவனங்கள் கெடு விதித்துள்ளன.

e-KYC சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கான கேஸ் விநியோகம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது, அந்த தேதிக்கு பின் புதிய சிலிண்டர்களை வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது என்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

ஏன்?

அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட போர் சூழல் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

கறுப்புச் சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதை தடுக்க KYC விதிகள் கடுமையாக்கப்பட்டன.

பிரதமரின் உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மற்றும் இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட வழக்கமான கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தும் நுகர்வோர் என வீட்டு உபயோகத்திற்காக எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பயோமெட்ரிக் ஆதார் மூலம் KYC-யை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

நிறுத்தம்?

வரும் ஆகஸ்ட் 15க்குள் இதை செய்து முடிக்காதவர்களுக்கு புதிய கேஸ் சிலிண்டர் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதாவது கேஸ் முன்பதிவு செய்யும் சேவை சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவர்கள் சரிபார்ப்பை முடித்த பின்னர் மீண்டும் வழங்கப்படலாம்.

மானிய விலையில் அல்லது குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் தகுதியையும் வாடிக்கையாளர்கள் இழக்கலாம். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கிடைக்கும் சிலிண்டருக்கும் மானிய தொகை வரமால் போக வாய்ப்புள்ளது.

இருப்பினும் இதுகுறித்து உறுதிப்படுத்தல் ஏதும் இல்லை. தற்போதைக்கு கெடு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

ஆதார் e-KYC சரிபார்ப்பது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோரில் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் செயலியை ( hp pay, indianoil one, hello bpcl) -ஐ டவுன்லோட் செய்து அதில் மொபைல் எண், நுகர்வோர் எண்-ஐ உள்ளிட்டு லாகின் செய்யவும்.

Update e-KYC என்பதை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். இதன்பின் மீண்டும் பிளே ஸ்டோருக்கு சென்று AadhaarFaceRD என்ற அதிகாரபூர்வ செயலியை பதிவிறக்கவும்.

அந்த செயலி மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கவும்

ஆன்லைனில் முடிக்க தெரியாதவர்கள் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூமோ அல்லது கேஸ் நிறுவனத்திற்கு நேரடியாக சென்றோ e-KYC முடிக்கலாம்.

அதேநேரம் ஏற்கனவே, e-KYC சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com