மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை தகனம்

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி.
Director Bhakyaraj
Published on

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com