அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்.
அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்குகள் 2022-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதி, "அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதனால், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுறேன்.

இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com