மேற்கு மாம்பலத்தில் பைனான்சியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கு மாம்பலத்தில் பைனான்சியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on: 
Summary

வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கையறை பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் மற்றும் ரூ.20ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளைய டித்து சென்று இருப்பது தெரிந்தது.

சென்னை மேற்கு மாம்பலம், பாலகிருஷ்ணன் தெரு விரிவை சேர்ந்தவர் வேல் முருகன். வீட்டின் கீது தளத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் பராமரிப்பு வேலை நடந்து வருவதால் அவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு சென்று விட்டார். பைனான்ஸ் அலுவலகத்தை மட்டும் அங்கேயே நடத்தி வந்தார்.

பைனான்ஸ் அலுவலகம்

நேற்று இரவு வழக்கம் போல் வேல்முருகனின் உறவினர் ஒருவர் பைனான்ஸ் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் அலுவலகத்தை திறக்க வந்தபோது வேல்முருகனின் வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை

இதுகுறித்து வேல்முருகனுக்கும், அசோக்நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கையறை பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் மற்றும் ரூ.20ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளைய டித்து சென்று இருப்பது தெரிந்தது.

போலீசார்

போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் மர்ம நபர்கள் 2 பேர் கைவரிசை காட்டி நகை, பணத்தை சுருட்டி தப்பியது தெரிந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் இருந்த லாக்கர் ஒன்றை உடைக்க முடியாததால் அதனை கொள்ளையர்கள் அப்படியே விட்டு சென்று உள்ளனர். இதனால் அதில் இருந்த நகை மற்றும் பணம் தப்பியது.

X

Maalai Malar
www.maalaimalar.com