சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர்

சிறுவன் சர்வேசை கல்விக்காக மைக்கேல் தத்தெடுத்தார்.
Boy - Michael
Published on

மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் அவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.

மைக்கேல் சாப்ட்வேர் என்ஜினீயர்

அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுவதை மனிதநேய சேவையாக செய்து வருகிறார்.

மாமல்லபுரம் சுற்றுலா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது பூஞ்சேரியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சர்வேஸ் (வயது 5) என்ற சிறுவன் ஒருவன் கல்வி கற்க முடியாமல் வறுமையிலும், பொருளாதாரம் இல்லாமலும் சிரமப்படுவதை அறிந்தார்.

இதையடுத்து சிறுவன் சர்வேசை கல்விக்காக மைக்கேல் தத்தெடுத்தார். சிறுவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.

சிபிஎஸ்இ

இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை சேர்த்தார். தொடர்ந்து படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் அனுப்புவது, போனில் தன்னம்பிக்கை ஊட்டுவது, ஆங்கிலம் சரளமாக பேச ஆன்லைன் பயிற்சி கொடுப்பது என மாணவனை ஊக்கப்படுத்தி வந்தார்.

மழலையர் பட்டமளிப்பு விழா

இந்த நிலையில் அந்த பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் நன்னடத்தை, எழுத்தழகு, விடுப்பு எடுக்காமை, ஆங்கில உச்சரிப்பு உள்ளிட்ட நற்குணங்களுக்காக சிறுவன் சர்வேசுக்கு மழலையர் பட்டம் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு நிகழ்ச்சி

இதை நேரில் பார்பதற்காக மைக்கேல் அயர்லாந்து நாட்டில் இருந்து மாமல்லபுரம் வந்தார். பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

மேலும் மைக்கேல், தான் தத்தெடுத்து படிக்க வைக்கும் சிறுவன் சர்வேசை மேடையில் பாராட்டி மகிழ்ந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களை வியக்க வைத்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com