நாளை தேநீர் விருந்து கிடையாது: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை கேரளா செல்ல உள்ளார்.
lok bhawan
Published on

ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து கிடையாது என தெரிவித்துள்ளது.

சுதந்திர தினம்

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மாநில ஆளுநர்கள் அங்குள்ள ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.

தேசத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், அரசு, அரசியல் கட்சியினர் உடன் ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர்தான் உள்ளார். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

தேநீர் விருந்து

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது அவருடனான மோதல் காரணமாக தி.மு.க. உள்பட அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தேநீர் விருந்தை புறக்கணித்த சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் முதலாக நாளை அவர் பங்கேற்பார் என்ற நிலையில் தேநீர் விருந்து இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்வதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநரின் தேநீர் விருந்து

கிடையாது. நாளை இரவு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகிறார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com