தை​யூ​ரில் காதல் விவகாரத்தில் இளை​ஞர் ஆண​வக் கொலை: நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம்

இந்த படுகொலையில் தொடர்​புடைய தலை​மறைவான மற்ற குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்​படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Thaiyur HonourKilling
Published on

செங்​கல்​பட்டு மாவட்​டம் தை​யூர் பகு​தி​யைச் சேர்ந்த இளை​ஞர் பிர​வீன் குமார், மாற்​றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒரு​வரைக் காத​லித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் வீட்​டா​ரின் கடும் எதிர்ப்​பையும் மீறி தொடர்ந்த காதலால் ஆத்திரமடைந்த கும்பல், பிர​வீன் குமாரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்​டியது. அப்​பகு​தி வாசிகளால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர், சிகிச்சை பல​னின்றி பரி​தாபமாக உயி​ரிழந்தார்.

4 பேர் கைது

இச்​சம்​பவம் குறித்து வழக்​குப்​ப​திவு செய்த திருப்​போரூர் காவல்​துறை அதிகாரிகள், தை​யூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு​மலை, மணி​கண்​டன், நந்​தீஸ், கவு​தம் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும், இந்த படுகொலையில் தொடர்​புடைய தலை​மறைவான மற்ற குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்​படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

OMR சாலையில் திடீர் மறியல்

பிர​வீனின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டு பழைய மகாபலிபுரம் சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்டோர் நடத்திய சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. காவல் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்

இயக்​குநர் பா.ரஞ்​சித் தலைமையிலான ‘நீலம் பண்பாட்டு மையம்’ இக்கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவித்துள்ள அம்மையம், சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com