செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாங்களும் கடந்த மாதம் 27ம் தேதி நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com