சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை

சென்னையில் பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல்
Heavy rain in Chennai
Published on

சென்னை அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, மாங்காட்டில் கனமழை பெய்து வருகிறது.

திருவேற்காடு, திருமழிசை, கோவூர், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com