சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னை புறநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் லேசான மழை.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
Published on

சென்னை கோயம்பேடு, மதுரவாயில், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல், அண்ணாசாலை, புதுப்பேட்டை, எழும்பூர், சேப்பாக்கம், கிண்டு, ஈக்காட்டுத்தாங்கள், வடபழனி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், ஆயிரம் விளக்கு, வள்ளுவர் கோட்டம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மந்தவெளி, பட்டினம்பாக்கம், சாந்தோம், ராயப்பேட்டை, அடையார், கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கொரட்டூர், வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மாதவரம், பெரம்பூர், வியாசர்பாடி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

ராமாபுரம், ஆலப்பாக்கம், வானகரம், திருவேற்காடு, பூந்தமல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com