கனமழை எதிரொலி- சென்னையில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னையில் கடந்த 3 நாட்களில் 14 ஆயிரம் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றினர்.
கனமழை எதிரொலி- சென்னையில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
Published on

சென்னையில் கனமழை பெய்த கடந்த மூன்று நாட்களில் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 14ம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15ம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

அதபோல், சென்னையில் 16ம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com