டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பு குறித்து மீனவர்கள் மத்தியில் அச்சமும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Premalatha
Published on
Summary

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள், டெங்கு காய்ச்சல் பரவல், நெய்வேலி என்.எல்.சி. திட்ட நில வாக்குறுதி, பட்டினப்பாக்கம் மீனவர்களின் வாழ்வாதார அச்சம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரேமலதா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி, மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசு செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 படுகொலைகள் நடந்து உள்ளன. இந்த படுகொலைகளுக்கும், தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததற்கும் அரசு என்ன பதிலளிக்கிறது.

நெய்வேலி என்.எல்.சி.

நெய்வேலி என்.எல்.சி. திட்டங்களுக்காக ஏற்கனவே நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அரசு முதலில் உறுதி செய்ய வேண்டும். “முதலில் ஏற்கனவே நிலம் வழங்கிய மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; அதன் பின்னரே புதிய விளைநிலங்களை கையகப்படுத்துவது குறித்து பேசுங்கள்” அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் ஒரு மாணவன் இறந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே டெங்கு பரவலைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது?

சென்னை பட்டினப்பாக்கம்

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பு குறித்து மீனவர்கள் மத்தியில் அச்சமும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அரசு உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்.

அரசு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பாதிப்பால் மக்கள் கடும் அவதிபடுகிறார்கள். மக்களை பாதிக்கும் இந்த பிரச்சினைகளுக்கு மவுனம் காக்காமல் தனிக் கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com