80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.
TN CM Vijay
Published on

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு பதக்கம்

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் விவரம் வருமாறு:-

திருவள்ளூர்

1. சி.ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர், கும்மிடிபூண்டி உட்கோட்டம், திருவள்ளுர் மாவட்டம்.

2. நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர், திருவள்ளுர் உட்கோட்டம், திருவள்ளுர் மாவட்டம்.

3. கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், கோவை மாநகரம்.

4. ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறை, திருச்சி மாநகரம்.

கோவை-சென்னை

5. சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, கோவை மாநகரம்.

6. வி.கோமதி, காவல்துறை உதவி தலை வர், நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.

7. மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம், பெரம்ப லூர் மாவட்டம்.

8. ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலைய னூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.

9.கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம், சிவகங்கை மாவட்டம்.

10. ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.

காவல் பதக்கம்

இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகள், சார் நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

1. டாக்டர் வி.சசி மோகன், காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல் சரகம்.

சென்னை-கரூர்

2.தெ.சண்முக பிரியா, காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம், சென்னை.

3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.

5. மு.ரவிக்குமார், தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம்.

தங்கப் பதக்கம்

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க வெகுமதியும் வழங்கப்படும்.

மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com