

ஜப்பான் ஓபன் 2020 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பி.வி .சிந்து அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜப்பான் ஓபன் 2026 இறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை வீழ்த்தி பி.வி.சிந்து தனது முதல் Super 750 பட்டத்தையும், ஜப்பான் ஓபன் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.
நேற்று டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியை தோற்கடித்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.
இறுதிப்போட்டியில் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் 'சூப்பர் 750' பட்டத்தைப் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பி.வி. சிந்து தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே மிகவும் திறமையாக விளையாண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றதால் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
தனது ஈடுபாடு, கடின உழைப்பு, தொடர் பயிற்சி, விடா முயற்சி, திறமை ஆகியவற்றால் பி.வி.சிந்து அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதனால் இந்தியாவில் விளையாட்டில் இளைஞர்களுக்கு ஆர்வம் கூடுகிறது.
பி.வி.சிந்து அவர்களின் விளையாட்டிற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களும், பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
உலக பேட்மிண்டனில் இந்தியாவின் பெருமையை மீண்டும் உயர்த்தியிருப்பதால் இந்தியாவின் விளையாட்டுத் திறமையை உலகமே உற்றுநோக்குகிறது.
தனது சர்வதேச பயணத்தில் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்து உலக அளவில் இந்தியர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பேரும் புகழும் பெற்றுத்தந்திருக்கிறார்.
பி.வி.சிந்து அவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும். ஜப்பான் ஓபன் 2020 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பி.வி .சிந்து அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.