இந்தாண்டின் புது வரவு... ராயன் விநாயகர் டூ வேட்டையன் விநாயகர்

'வேட்டையன்' பட ரஜினிகாந்த் கெட்-அப்பில் விநாயகர் சிலை செய்து மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் அசத்தியுள்ளார்.கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஜெயிலர் விநாயகர் வடிவமைத்து ரஞ்சித் காட்சிப்படுத்தியிருந்தார்
raayan - vettaiyan vinayagar
Published on

விநாயகர் சதுர்த்தி நாளை மறுதினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கொழுக்கட்டை மாவு உள்ளிட்டவற்றை வாங்குவதுடன் களிமண்ணால் செய்த விநாயகர் சிலை, பூ போன்ற பொருட்களை வாங்கி வந்து பூஜை செய்வது வழக்கம்.

பூஜை முடிந்ததும் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கொண்டு சென்று மக்கள் கரைப்பர்.

இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஞ்சித், 'வேட்டையன்' பட ரஜினிகாந்த் கெட்-அப்பிலும் ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தோற்றத்தை போலவும் களிமண்ணால் விநாயகர் சிலை வடிவமைத்து அசத்தி உள்ளார்

இதே போல் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஜெயிலர் விநாயகர் வடிவமைத்து ரஞ்சித் காட்சிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com