

வருகிற டிசம்பர் 24-ந் தேதியும் மற்றொரு சூப்பர் மூன் தோன்றவுள்ளது என்று பிர்லா கோளரங்க வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வானில் நாளை 'பீவர் சூப்பர் மூன்' எனப்படும் பிரமாண்ட முழு நிலவு தோன்றவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு இந்திய நேரப்படி அன்று இரவு 8.23 மணிக்கு நிலவு தனது முழுமையான ஒளியை அடையும். சூரியன் மறைவுக்குப் பிறகு கிழக்கு வானில் நிலவு உதிக்கும்போதே இதனை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.
நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் (சுமார் 3 லட்சத்து 60 ஆயிரத்து 765 கி.மீ தொலைவில்) வருவதால், வழக்கமான முழு நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.
நவம்பர் மாதத்தில் வரும் முழு நிலவு பாரம்பரியமாக 'பிரமாண்ட சூப்பர் மூன்' என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலத்திற்கு முன்பாக நீர்நாய்கள் தங்களின் இருப்பிடங்களைத் தயார்படுத்தும் காலம் என்பதால் இப்பெயர் வந்தது. அடுத்தடுத்து வரவிருக்கும் சூப்பர் மூன் வரிசையில் இது முதல் நிகழ்வாகும்.
இதனைப் பார்ப்பதற்குத் தொலைநோக்கி எதுவும் தேவையில்லை. வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருந்தால் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். இதனைக் காண மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதைத்தொடர்ந்து வருகிற டிசம்பர் 24-ந் தேதியும் மற்றொரு சூப்பர் மூன் தோன்றவுள்ளது என்று பிர்லா கோளரங்க வானியல் விஞ்ஞானிகள் கூறினர்.