

நான்கே மாதங்களில் நனிசிறக்கும் நான்கு திட்டங்கள் மக்களுக்காக மக்களுடன் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் திட்டங்களை குறிப்பிட்டுள்ளார்.
தாய்மாமன் தங்க மோதிர திட்டம், மகளிருக்கான வெற்றிப்பயண திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வரும் 6ம் தேதி தமிழகத்தில் இரண்டு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் விஜய் தனது ரோடு ஷோவை தொடங்கவுள்ளார்.
இதற்கிடையே, தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் வஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நான்கே மாதங்களில்
நனிசிறக்கும் நான்கு திட்டங்கள் மக்களுக்காக... மக்களுடன்…!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.