30 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி சொன்னாலும் சொல்வார்கள்- பாஜகவை கலாய்த்த உதயநிதி

"கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்கிற புத்தக வெளியீட்டு விழா.விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி சொன்னாலும் சொல்வார்கள்- பாஜகவை கலாய்த்த உதயநிதி
Published on

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய "கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார். 

அப்போது அவர்,"கொரோனா நோய் குறித்து புத்தகங்களில் நிறைய வெளிவர வேண்டும். இல்லையென்றால் ஒரு 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது. அப்போது பாஜக ஆட்சி செய்தது. மோடி ஆட்சி செய்தார். அதனால்தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com