முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம்: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம்:  எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு தி.மு.க. அரசுதான்.

புயல் மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும்.

தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த தேவையான ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

2015-ம் ஆண்டு புயல் பாதிப்பை அ.தி.மு.க. அரசு திறமையாக சமாளித்தது.

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com