அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்- போக்குவரத்து பாதிப்பு

மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.
பெண்கள் போராட்டம்
பெண்கள் போராட்டம்
Published on: 
Summary

குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே ஆழங்காத்தான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

குடிநீர்

இந்த பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சாலை மறியல்

இந்த நிலையில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்து குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மாதமாக நீடித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com