அண்ணாமலையை கைது செய்ய தி.மு.க. ரகசிய திட்டம்- பாஜக கண்டனம்

கோவையில் அண்ணாமலை வெல்வது உறுதி. அண்ணாமலை ஜுரம் தி.மு.க.வை ஆட்டிப்படைத்து வருகிறது.
அண்ணாமலையை கைது செய்ய தி.மு.க. ரகசிய திட்டம்- பாஜக கண்டனம்
Published on

சென்னை:

தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை யாரும் எதிர்க்க துணியாத நிலையில் கடந்த 2021 ஜூலையில் தமிழக பா.ஜ.க. தலைவரானது அண்ணாமலை துணிவுடன் தக்க ஆதாரங்களுடன் எதிர்த்து வருகிறார். அது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்றதும் பெரும் படையை அனுப்பி அதிகாரம், பணம், ஆள்பலத்தை வைத்து அவரை வீழ்த்த அத்தனை அட்டூழியங்களையும் திமுக செய்தது. ஆனாலும் கோவையில் அண்ணாமலை வெல்வது உறுதி. இப்படி அண்ணாமலை ஜுரம் தி.மு.க.வை ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் எப்படியாவது, ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து அவரை முடக்கி விடலாம் என தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பகல் கனவு கண்டு வருகின்றனர்.

புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கவர்னர் மாளிகை அனுமதி கொடுத்து விட்டதாக பொய்யான தகவலையும் பரப்பினர். ஆனால் இதை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.

எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அண்ணா மலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com