தமிழக வெள்ள பாதிப்பு- விவாதிக்க கோரி பாராளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ்

பாராளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று கூட உள்ளது.தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
தமிழக வெள்ள பாதிப்பு- விவாதிக்க கோரி பாராளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ்
Published on

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாராளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று கூட உள்ளது.

இந்த நிலையில், தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை தி.மு.க. அளித்துள்ளது.

பாராளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்புவது குறித்து விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com