ஐகோர்ட் உத்தரவு எதிரொலி.. நடராஜர் கோவில் கனகசபைக்குள் சென்று வழிபட்ட பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.கனகசபைக்குள் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்தநிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஐகோர்ட் உத்தரவு எதிரொலி.. நடராஜர் கோவில் கனகசபைக்குள் சென்று வழிபட்ட பக்தர்கள்
Published on

சென்னை:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை முதல் கனகசபைக்குள் நின்று நடராஜரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கனகசபைக்குள் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்தநிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com