நீர்வரத்து குறைந்தாலும் டெல்டா பாசனத்திற்கு தடையின்றி செல்லும் காவிரி நீர்

கடந்த ஆண்டின் அந்த அளவுடன் ஒப்பிடும்போது தற்போது சுமார் 76 சதவீதம் குறைவான நீர்வரத்து பதிவாகியுள்ளது.
நீர்வரத்து குறைந்தாலும் டெல்டா பாசனத்திற்கு தடையின்றி செல்லும் காவிரி நீர்
Published on: 

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போது 12,900 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதில் 12,600 கன அடி காவிரி ஆற்றிலும், 300 கன அடி கிளை வாய்க்கால்களிலும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

வாய்க்கால்

கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில், 23-ந்தேதி முக்கொம்பு மேலணைக்கு 54,000 கன அடி நீர்வரத்து பதிவாகி இருந்தது. அதில் 12,800 கன அடி காவிரியிலும், 41,000 கன அடி கொள்ளிடத்திலும், 200 கன அடி வாய்க்கால்களிலும் திறந்து விடப்பட்டது.

நீர்வரத்து

தற்போது முக்கொம்பில் 12,900 கன அடி மட்டுமே நீர்வரத்து உள்ள நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந்தேதியுடன் ஒப்பிடுகையில் 41,100 கன அடி குறைவாக நீர்வரத்து உள்ளது. அதாவது, கடந்த ஆண்டின் அந்த அளவுடன் ஒப்பிடும்போது தற்போது சுமார் 76 சதவீதம் குறைவான நீர்வரத்து பதிவாகியுள்ளது.

காவிரி

இருப்பினும், தற்போது முக்கொம்பில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் பாசனத்திற்காக காவிரி மற்றும் கிளை வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ளதால், டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com