தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின் போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.

முதலமைச்சர் விஜய் தலைமையில்

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள்.

புறக்கணிப்பு

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

கூட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பங்கேற்பு

த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.

ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர். இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 4 மேல் சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com