

நாடாளுமன்ற தொகுதி எல்லைகளை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தற்போதைய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. மறுவரையறைக்குப் பிறகு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடந்த சில தசாப்தங்களாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன.
இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார். ஆனால், இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால் என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
புதிய மறுவரையறை திட்ட வரைவின்படி அமையக்கூடிய உத்தேச 59 தொகுதிகள் இதோ:
1. திருத்தணி
2. திருவள்ளூர்
3. சென்னை வடக்கு
4. சென்னை கிழக்கு
5. சென்னை மத்திய
6. சென்னை தெற்கு
7. சென்னை மேற்கு
8. தாம்பரம்
9. செங்கல்பட்டு
10. காஞ்சிபுரம்
11. வேலூர்
12. திருப்பத்தூர்
13. ராணிப்பேட்டை
14. திருவண்ணாமலை
15. வந்தவாசி / ஆரணி
16. திண்டிவனம்
17. விழுப்புரம்
18. கள்ளக்குறிச்சி
19. கடலூர்
20. சிதம்பரம்
21. ஓசூர்
22. கிருஷ்ணகிரி
23. தர்மபுரி
24. சேலம்
25. மேட்டூர்
26. ராசிபுரம்
27. நாமக்கல்
28. ஈரோடு
29. கோபிசெட்டிபாளையம்
30. திருப்பூர்
31. தாராபுரம் / பழனி
32. பொள்ளாச்சி
33. கோவை கிழக்கு
34. கோவை மேற்கு
35. நீலகிரி
36. கரூர்
37. பெரம்பலூர்
38. அரியலூர் / லால்குடி
39. திருச்சிராப்பள்ளி
40. தஞ்சாவூர்
41. கும்பகோணம்
42. மயிலாடுதுறை
43. நாகபட்டினம்
44. திருவாரூர்
45. புதுக்கோட்டை
46. சிவகங்கை
47. ராமநாதபுரம்
48. தூத்துக்குடி
49. திருச்செந்தூர்
50. திருநெல்வேலி
51. நாங்குநேரி / கன்னியாகுமரி
52. கன்னியாகுமரி / நாகர்கோவில்
53. தென்காசி
54. சிவகாசி
55. விருதுநகர்
56. தேனி
57. மதுரை கிழக்கு
58. மதுரை மேற்கு
59. திண்டுக்கல்
மறுவரையறை ஆணையத்தின் இறுதி முடிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு பின்னரே இறுதி வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.