அமோனியா வாயு கசிவு: உயரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

தொழிற்சாலையில் வேதிப்பொருள் விபத்து நிகழ்ந்தது.
அமோனியா வாயு கசிவு: உயரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கடல் உணவு பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அனைவரும் பெண்கள் என்று சுகாதார துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் ஒடிசாவை சேர்ந்தவர்கள், இருவர் அசாம் மாநிலத்தையும், ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

வேதிப்பொருள் கசிவு:

பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பையர்/மஞ்சுங்கரணை பகுதியில் அமைந்துள்ள அந்த நிலையத்தில், வழக்கமான தொழில் நடவடிக்கைகளின்போது இந்த நச்சு தொழிற்சாலை வேதிப்பொருள் கசிவு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பெண்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன், மருத்துவ கண்காணிப்பிலும் உள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்தது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com