கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அரியலூரில் இருந்து வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
Published on

விருத்தாசலம்:

கழுதூரில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் உள்ளது. இங்குள்ள வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கலைஞர் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திடலில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

இதில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ. கணேசன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் தமிழக வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தி.மு.க. இளைஞரணி மாநகர, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது.

முன்னதாக அரியலூரில் இருந்து வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com