சென்னையில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை- மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வரப்பெரும் உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Published on

சென்னை மாநகராட்சியில் பொதுவான சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், உண்மைக்கு மாறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி செலுத்தி வருபவர்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில், திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டவர்கள் இதன் மீது ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்திட வாய்ப்பளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

எனவே சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வரப்பெரும் உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com