தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி நெல்லையில் காங்கிரசார் சாலை மறியல்

நெல்லை காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் ராமேஸ்வரன் தலைமை தாங்கினார்.
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி நெல்லையில் காங்கிரசார் சாலை மறியல்
Published on: 
Summary

ஆர்ப்பாட்டத்தின் போது ஞானேஷ் குமார் முகமூடி அணிந்த நபரை கையில் விலங்கிட்டு கைது செய்து அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஞானேஷ்குமார் முகமூடியை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரித்தனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கண்டித்தும் அவரை பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் ஊர்வலம் சென்ற பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை கைது செய்ததை கண்டித்தும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் நெல்லையில் காங்கிரசார் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், வழக்கறிஞர் அணி மரிய குழந்தை, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் டியூக் துரை ராஜ், மண்டல தலைவர் கெங்கராஜ், துணைத் தலைவர் மணிகண்ட நாராயணன், மாநில சேவா தள செயலாளர் அனிஷ், ஓ.பி.சி. மாநில செயலாளர் சுப்பிரமணியன், சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர்கள் பரணி இசக்கி, சொக்கலிங்க குமார், மாவட்டத் துணைத் தலைவர் வெள்ள பாண்டியன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஞானேஷ்குமார்

ஆர்ப்பாட்டத்தின் போது ஞானேஷ் குமார் முகமூடி அணிந்த நபரை கையில் விலங்கிட்டு கைது செய்து அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஞானேஷ்குமார் முகமூடியை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரித்தனர்.

இதனைத் தொடர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சாலை மறியல் சுமார் 10 நிமிடம் நடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 30 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com