மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்

பல இடங்களில் தேடியும் ஹசிபா பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் தக்கலை போலீசில் ஷாஜகான் புகார் செய்தார்.
மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
Published on: 

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அஞ்சு வண்ணம் பள்ளி தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஹசிபா (வயது 20). மலங்கரை பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற இவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

போலீஸ் நிலையம்

இதையடுத்து அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்க வில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பல இடங்களில் தேடியும் ஹசிபா பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் தக்கலை போலீசில் ஷாஜகான் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி ஹசிபாவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாணவி ஹசிபா, மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் தக்கலை போலீஸ் நிலையம் வந்தார். அவர் தன்னுடன் வந்துள்ள தனியார் மருந்தக ஊழியர் அபினை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

காதல் ஜோடி

மேலும் தாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக இருவரின் பெற்றோரையும் போலீசார் அழைத்து பேசினர். தொடர்ந்து காதல் ஜோடியிடம் திருமணத்தை பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com