நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

விவசாயிகளை நம் அரசு எப்போதும், விட்டுவிடாது, தோளோடு தோளாக ஆதரவாக இருப்போம் என்றார்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on

மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பேசியதாவது:-

* நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

* பொதுரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.159 அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும்.

* நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.

* வரலாற்றிலேயே முதல் முறையாக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.159 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

* கரும்புக்கான ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும்.

* மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும்.

* விவசாயிகளை நம் அரசு எப்போதும், விட்டுவிடாது, தோளோடு தோளாக ஆதரவாக இருப்போம் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com