குடியுரிமை கோரி விண்ணப்பம்- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.
குடியுரிமை கோரி விண்ணப்பம்- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com