சீனாவுக்கு தப்பிய குரோம்பேட்டை குழுவினர்?- டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு பேட்டி!

மலை மீது ஏறி சீனாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்.
Travels agency
Published on
Summary

சென்னை குரோம்பேட்டையில் இருந்து நேபாளம் யாத்திரை சென்ற தமிழர்கள் 49 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை என டிராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு சென்று வந்த குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மறவேள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வெள்ளத்தால் மூடப்பட்ட சீன குடியுரிமை மையத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நீல நிற உடையில் தப்பியோடும் மக்கள், யாத்திரை சென்ற குரோம்பேட்டை குவினர்தான்.

மலை மீது ஏறி சீனாவுக்கு தப்பி சென்றிருக்கலாம். தற்போது வரை நேபாள அரசு மட்டுமே தகவல் தெரிவிக்கிறது. சீன அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

சீன அரசு தகவல் தெரிவித்தால் மட்டுமே குரோம்பேட்டை குழுவினர் பற்றி தகவல் தெரிய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com