பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் இது- முதலமைச்சர் விஜய்

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது.
TN CM Vijjay
Published on

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

அதில், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி தனித் தீர்மானம்.

மக்களவை, சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக, தீர்மானம் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-

நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர்.

பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.

பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, சமூக நீதி.

2026 சட்டமன்றத்தில்..

2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில், 2026 சட்டமன்றத்தில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுகளை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கே தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகுதிமறுவரையறை குறித்து விவாதித்தோம். நாட்டின் மக்கள்தொகையில் சம அளவில் பெண்கள் உள்ளதால் அவர்களும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது, மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும்.

வரும் பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு 3-ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி, தொகுதி மறுவரையறைவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com