பெரம்பூரில் முதலமைச்சர் விஜய்: பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்

இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பொது மக்களுக்கு தயாராக இருந்த சான்றிதழ்களை வழங்கினார்.
TN CM Vijay
Published on: 

முதலமைச்சர் விஜய் இன்று காலை மாதவரம் பால் பண்ணைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை முடித்து கொண்டு தனது சட்டமன்ற தொகுதியான பெரம்பூர் தொகுதி அலுவலகத்துக்கு சென்றார்.

அங்குள்ள தனது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்ற அவர் பொது மக்களை சந்தித்தார். அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் குறைகளும் கேட்டறிந்தார்.

அங்குள்ள இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பொது மக்களுக்கு தயாராக இருந்த சான்றிதழ்களை வழங்கினார். சுமார் 15 நிமிட நேரம் அவர் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முதலமைச்சர் விஜய் திடீரென பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்துக்கு வந்ததை அறிந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக திரண்டு நின்றிருந்தனர்.

விஜய்யை பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தபடி சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com