பரஸ்பரம் வணக்கம் தெரிவித்த முதலமைச்சர் விஜய்- உதயநிதி

காலை 9:58 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.
உதயநிதி ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய்
உதயநிதி ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய்
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வின் போது, முதலமைச்சர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு அவை உறுப்பினர்களிடையே கவனத்தை பெற்றது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும், காலை 9:57 மணி அளவில் முதலமைச்சர் விஜய் சபை மண்டபத்திற்குள் நுழைந்தார். அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தவாறு அவர் தனது இருக்கையை நோக்கிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து, காலை 9:58 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் நேற்று கைதாகி விடுதலையான நிலையில் இன்று சட்டசபைக்குள் வந்ததும் எப்போதும் போல இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com