பெண் கல்வியே அரண்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன். பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.
பெண் கல்வியே அரண்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
Published on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி ஷோபனாவின் கல்லூரி படிப்புக்கு உதவியது தொடர்பாக நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.

மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.

ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com