தெற்கில் விடியல் பிறந்தது போல் விரைவில் இந்தியாவிற்கும் விடியல் பிறக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது.நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.
தெற்கில் விடியல் பிறந்தது போல் விரைவில் இந்தியாவிற்கும் விடியல் பிறக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திமுக இளைஞரணியை பார்க்குமபோது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்.

மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது. 1980ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டது. எனக்கு அப்போது 30 வயது. என்னை வளர்த்த, உருவாக்கிய இடம் இளைஞரணி. 1980ல் முதல் கட்சிக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது இளைஞரணி. திமுக இளைஞரணி எனது தாய் வீடு.

மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டுபவர் அமைச்சர் நேரு. நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு.

நமது வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக 6வது முறையாக ஆட்சியில் உள்ளது. நவீன தமிழகத்தை உருவாக்கி கொடுத்த சிற்பி கலைஞர். 

முன்பு நாடுகள் 3 முதல் 4 நாட்கள் நடக்கும். தற்போகது, தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 75 ஆண்டுகள் ஆகியும் திமுக கம்பீரமாக நிற்க காரணம் நமது கொள்கை என்ற உரம்.

நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது நமது முழுக்கம். எல்லா மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி தேவை.

எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்பது இல்லை. மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் இயந்திரங்களாக மாநில அரசுகளை மாற்றிவிட்டனர்.

வெள்ள நிவாரண நிதியை பலமுறை கேட்டும் இன்னும் தரவில்லை. திருக்குறளை சொன்னால், பொங்கல் கொண்டாடினால் போதும் என நினைக்கிறார்கள்.

தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள், இது பெரியார் மண். இங்கு அவர்களது எண்ணம் பலிக்காது.

கட்சிகளை உடைப்பது, எம்எல்ஏக்களை இழுப்பது, ஆளுநர் மூலம் ஆட்சி செலுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி என்பது மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும்.

3 மாதங்கள் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை ஏற்கனவே அமைத்துவிட்டோம். 5 பேர் கொண்ட குழு 40 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து அறிவுறுத்துவர். வெற்றி பெறுபவரே பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

நாளை நமதே, நாற்பதும் நமதே என அனைவரும் புறப்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com