தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தலா 1 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
CauveryWater Issue
CauveryWater
Published on: 

டெல்லியில் தொடர் கூட்டம்:

தமிழகத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், டெல்லியில் காவிரி ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டம் தொடர்ந்து பரபரப்புடன் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு தினசரி 1 டி.எம்.சி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்குமுறைக் குழு அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு சார்பில் அரசு அதிகாரிகள் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் சென்னையில் இருந்து கலந்துகொண்டனர்.

தமிழகத்தின் நிலைப்பாடும் பரிந்துரையும்:

தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை கர்நாடகா உரிய நேரத்தில் திறந்து விடாததால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை இக்கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இரு மாநில நிலவரங்களையும் ஆய்வு செய்த குழு, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக தினசரி 1 டி.எம்.சி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும் 15 நாட்களுக்கு் நீர் திறக்க காவிரி ஒழுங்கற்று பரிந்துரைக்குழு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் மாதம் வழங்க கூடிய 45 டிஎம்சி நீரை திறந்து வைக்க உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.

இது தொடர்பான இறுதி முடிவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com