

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும், ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை (சமூகநீதி சர்வே) உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார்.
அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பாமக நடத்திய அனைத்துக்கட்சி தீர்மானத்தை முதலமைச்சர் விஜய்யிடன் அன்புமணி வழங்கினார்.