15 கி.மீ. தூரத்தை 53 நிமிடங்களில் ஸ்கேட்டிங்கில் கடந்து சிறுவன் சாதனை

போதைக்கு நோ சொல்லுங்கள், விளையாட்டு கனவுகளை உருவாக்கும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.
ஸ்கேட்டிங்
ஸ்கேட்டிங்
Published on: 

போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கனி ஸ்போர்ட்ஸ் அரினா சார்பில் நடைபெற்ற ஸ்கேட்டிங் சாதனை நிகழ்வில், வீரபாண்டியை சேர்ந்த 5 வயது சிறுவன் அகிலன் 15 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 53 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை பரளி டோல்கேட்டில் தொடங்கிய ஸ்கேட்டிங் பயணத்தை முன்னாள் ஒன்றிய சேர்மன் வீரராகவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாதனை பயணம், ஊமச்சி

குளத்தில் நிறைவடைந்தது. வழி நெடுகிலும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்று சிறுவனை பாராட்டினர்.

போதைக்கு நோ சொல்லுங்கள்

இந்த நிகழ்வில், போதைக்கு நோ சொல்லுங்கள், விளையாட்டு கனவுகளை உருவாக்கும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல், விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், விளையாட்டே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புரிந்த சிறுவன் அகிலனை கனி ஸ்போர்ட்ஸ் அரினா கோச் கனி, நிறுவனர் பிரதீபா மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் விஜி கண்ணன்-ஷீலா மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

X