சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் உடல் - மாலை நல்லடக்கம்

1990-இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம், இசையமைப்பாளர் தேவாவிற்கு முதல் மாநில திரைப்பட விருதை பெற்று தந்தது.
Deva Music Director
Published on: 
Summary

சென்னையில் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று இறுதி சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான மாங்காட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

தேவனேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயருடன் பிறந்த தேவா, 1986-ஆம் ஆண்டு வெளியான மாட்டுக்கரை மன்னாரு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதையடுத்து 1990-இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம், இசையமைப்பாளர் தேவாவிற்கு முதல் மாநில திரைப்பட விருதை பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், ராமராஜ், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட் பல திரைப்பிரபலங்களின் படங்களுக்கு தேவா இசையமைத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலமைச்சர் அஞ்சலி

இதையடுத்து தேவாவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உள்ள தேவா வீட்டிற்கு நேற்று வந்த தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அவரது இறுதி அஞ்சலி முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, சென்னை டி.நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி வரை திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தனது தந்தையின் உடல் வைக்கப்படும் என தெரிவித்தார்.

சொந்த ஊரில் அடக்கம்

இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் இசையமைப்பாளர் தேவாவின் உடல், சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள மாங்காடு கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

தேவாவின் உடல் மாங்காடு கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com