பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம்-அமைச்சர் துரைமுருகன்

பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினம்.அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.
பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம்-அமைச்சர் துரைமுருகன்
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அன்பழகன் உருவப் படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, `சொல்லுதல் யாவருக்கும் எளிய அரியவாம்' என திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com