வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: அவிட் குரூப் ரூ.7000 கோடி முதலீடு- 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு

தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
TN CM Vijay
Published on

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.

சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.

அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

97 புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சர் முன்னிலையில் ஹிந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

ஹிந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.

டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.

ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அவிட் குரூப் ரூ.7000 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மலம், 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.

ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.

ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.

ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது.

WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.

அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

ரஷியாவின் முன்னணி வங்கியான SBER BANK தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com