அண்ணா படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
அண்ணா படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியில் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

எண்ணித் துணிக கருமம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com