முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை கட்டி வைத்து விடுவார்கள்- அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

ஏற்கனவே முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்
Published on

தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் தி.மு.க. அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தி.மு.க. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார்.

சர்ச்சை பேச்சு

அவர் பேசுகையில் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசினார். அவர் பேசியதாவது:-

தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை. தற்போது காவிரி பிரச்சனையில் என்ன பாடு படுது. நான் ஹெலிகாப்டரில் சென்று நேரில் பார்ப்பேன் என்கிறார். முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை அங்கு பிடித்து கட்டி வைத்து விடுவார்கள் என்பதால் ஹெலிகாப்டரில் செல்வேன் என்கிறார். தேவையில்லாமல் அந்த மாநிலத்திற்கு சென்று ஒப்பந்தம் போட்டு நமது மாநிலம் கெட்டுப் போய் விடக்கூடாது. காமராஜர் பெயரை சொல்லி கதை விட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்கனவே முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com